ADDED : ஜன 12, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மதுவிலக்கு எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பழைய நீதிமன்ற வளாகம் அருகே ரோந்து சென்றனர்.
திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்காவல்புரத்தை சேர்ந்த முத்துவேல் மகன் குமரேசன் 24, திருப்புவனம் புதுார் பாலமுருகன் மகன் சாந்தபிரியன் 22 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 50 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மன்னர் மேல்நிலை பள்ளி அருகே சந்தேகம் படும்படி நின்ற திருப்புவனம் புதுார் அன்பரசு மகன் சிவபாலன் 26, வில்லியரேந்தல் சிவஞானம் மகன் ஜெயசக்தி 24 கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

