/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனை அருகே குப்பை எரிப்பு
/
மருத்துவமனை அருகே குப்பை எரிப்பு
ADDED : அக் 21, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே நகராட்சி குப்பையை கொட்டி எரிப்பதால் நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிப்பு அடைவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வெளிநோயாளிகள் ஆயிரம் பேர், உள் நோயாளிகள் 800பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். நகரில் சேகரமாகும் குப்பைகளை மருத்துவ கல்லுாரி அருகேயும், அரசு கல்லுாரி பின்புறமும் கொட்டி தீ வைக்கின்றனர். இங்கு எழும் புகை மூட்டத்தால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.