UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:45 PM
எஸ்.புதுார்: எஸ் புதுார் அருகே மலைப்பாதையில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த செக்போஸ்ட் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிங்கம்புணரி,எஸ்.புதுார் ஒன்றியங்களை பிரிக்கும் மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் கோழிக்கழிவு உள்ளிட்ட குப்பைகளை ரோட்டின் இருபுறமும் கொட்டிச்செல்கின்றனர். இதனால் மலை பாதையில் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களின் போது அடிவார கிராமங்களுக்கு குப்பை அடித்துச் செல்லப்பட்டு கண்மாய், வயல்வெளியில் தேங்கி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மலைப்பாதையின் இரு புறமும் சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் செக் போஸ்ட் அமைத்தும் குப்பை கொண்டு வரும் வாகனங்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
