ADDED : ஜூன் 29, 2026 11:35 PM

அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மழை நீர் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சியில் மனவொத்தன் செல்லும் பாதையில் மழைநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் வரும் தண்ணீர் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள சாலப்பள்ளத்தில் விழுந்து சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்நிலையில் இந்த ஊராட்சியில் சேகரிக்கப் படும் குப்பையை ஊழியர்கள் இந்த மழை நீர் ஓடையில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் ஓடை மூடப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் நீருடன் குப்பை கலந்து ஊரணியில் கழிவுநீராக தேங்கி இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது.
