/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கொட்ட இடம் இல்லாததால் கலெக்டர் வளாகத்தில் கொட்டி எரிப்பு
/
குப்பை கொட்ட இடம் இல்லாததால் கலெக்டர் வளாகத்தில் கொட்டி எரிப்பு
குப்பை கொட்ட இடம் இல்லாததால் கலெக்டர் வளாகத்தில் கொட்டி எரிப்பு
குப்பை கொட்ட இடம் இல்லாததால் கலெக்டர் வளாகத்தில் கொட்டி எரிப்பு
ADDED : அக் 01, 2025 10:05 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்ட இடம் இல்லாததால் கலெக்டர் வளாகத்தில் குப்பையை கொட்டி எரித்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தினமும் 13 டன் குப்பை சேகரமாகின்றன. இந்த குப்பையை சுந்தரநடப்பு பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த காலங்களில் ஊழியர்கள் கொட்டி வந்தனர். குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டி வைக்காமல் மட்கும் குப்பைகளை நுண் உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், மட்காத குப்பைகளை தொழிற்சாலை களுக்கும் விற்பனை செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாக இயக்குநரகம் உத்தரவிட்டது.
சுந்தரநடப்பு குப்பை கிடங்கு அகற்றப்பட்டு குறுங்காடாக மாற்றப்பட்டது.
இதனால் சிவகங்கை நகரில் மானாமதுரை ரோடு தெற்கு மயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டி நுண்உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால் குப்பையை உரமாக மாற்றாமல் அவற்றை நகராட்சி ஊழியர்கள் மருத்துவக் கல்லுாரி அருகே, கலெக்டர் வளாகம், சிபிசிஐடி அலுவலகம் முன்பு கொட்டி எரித்து வருகின்றனர். இதனால்அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகராட்சித் தலைவர் துரை ஆனந்த் தலைமையிலான கவுன்சிலர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்குக்கு 6 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்க வேண்டுமென கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனர். கலெக்டர்கள் மதுசூதனன், ஆஷா அஜித் என இரு கலெக்டர் மாறிச் சென்றும் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்காத நிலையில் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கலெக்டர் வளாகத்தில் பல இடங்களில் குப்பை கொட்டி வருகின்றனர்.