ADDED : செப் 21, 2026 12:58 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பையை பேரூராட்சி அலுவலகம் பின்னால் கொட்டி வருகின்றனர். குப்பை கிடங்கு தேர்வு பணி தொய்வால் குப்பை தேங்கி வருகிறது. விரிவாக்க பகுதியான பாரதியார் நகர், இடையவலசை ரோடு பகுதி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பையை ரோட்டிலேயே கொட்டி தீ வைக்கின்றனர். குப்பையை சுத்திகரிப்பு செய்ய பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
