ADDED : ஜூன் 30, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, ஜூலை 1--
காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் ஜெமினி சர்க்கஸ் நடந்து வருகிறது.
சர்க்கஸ் உரிமையாளர் டைடஸ் வர்கீஸ் கூறுகையில்; கோவிலுார் டி.சி.எல்., லிமிட் எதிரே ஜெமினி சர்க்கஸ் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. வாட்டர் ப்ரூப் கூரை அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கலைஞர்களால் சர்க்கஸ் நடத்தப்படுகிறது. ஜூலை 6 வரை நடைபெறும் சர்க்கஸ், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி என இரு காட்சிகள் நடைபெறும்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் மதியம் 1 மணி, மாலை 4, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடைபெறும். டிக்கெட் விலை ரூ. 150, ரூ. 200, ரூ. 300 ஆகும்.
