/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகள எதிர்பார்ப்பு
/
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகள எதிர்பார்ப்பு
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகள எதிர்பார்ப்பு
இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகள எதிர்பார்ப்பு
ADDED : ஜன 30, 2024 01:48 AM

இளையான்குடி: இளையான்குடியில்விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமம்,சூராணம் ,முனைவென்றி,குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் இதனை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, உள்ளிட்ட பகுதிகளிலும் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய்க்கு காரம் அதிகமிருப்பதால் மிளகாய்க்கு அதிக மவுசு உள்ளது.
பல்வேறு பயன்பாடுடைய இந்த குண்டு மிளகாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தி குண்டு மிளகாய் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், இளையான்குடி பகுதியில் ஆண்டுக்கு 30,000 எக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. குண்டு மிளகாய்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கிடங்கு இல்லாத நிலையில் விவசாயிகள் சாகுபடி நேரத்தில் தனியார்வியாபாரிகளிடம் குறைந்த விலையில் மிளகாயை விற்பனை செய்து வருகின்றனர்.
மத்திய அரசு இந்த குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கினால் இப்பகுதிகளில் மிளகாய்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைய வாய்ப்புள்ளது. விவசாயிகளும்அதிகளவில் குண்டு மிளகாயை சாகுபடி செய்ய ஆர்வத்துடன் உள்ளோம் என்றனர்.