/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தயாராகுது...ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு :மாவட்டத்தில் 4.19 லட்சம் கார்டுக்கு கிடைக்கும்
/
தயாராகுது...ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு :மாவட்டத்தில் 4.19 லட்சம் கார்டுக்கு கிடைக்கும்
தயாராகுது...ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு :மாவட்டத்தில் 4.19 லட்சம் கார்டுக்கு கிடைக்கும்
தயாராகுது...ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு :மாவட்டத்தில் 4.19 லட்சம் கார்டுக்கு கிடைக்கும்
ADDED : டிச 29, 2025 06:39 AM

சிவகங்கை: சிவகங்கையில் 4.19 லட்சம் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, முழு நீள கரும்பு வழங்குவதற்கான நடவடிக்கையில் நுகர் பொருள் வாணிப கழக மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட அளவில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், நுகர்பொருள் வாணிப கழகம், பாம்கோவின் கீழ் முழு, பகுதி நேர ரேஷன் கடைகள் 856 வரை செயல்படுகின்றன. இந்த கடைகளின் கீழ் 4.18 லட்சம் கார்டுதாரர்கள் இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். *
4.19 லட்சம் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு:
2026 பொங்கல் பண்டிகைக்கு கார்டுதாரர்களுக்கு வழங்க பொங்கல் பரிசு தொகுப்பாக கார்டுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அந்தந்த ரேஷன் கடை விற்பனையளா்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பொங்கல் பரிசு தொகுப்பு கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட அளவில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 295 ரேஷன் கார்டுதாரர்களும், அகதிகள் முகாமில் வசிக்கும் 1,060 கார்டுதாரர்கள் உட்பட 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 19 ஆயரித்து 355 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை மூடைகளை இருப்பு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மாவட்ட அளவில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 355 கார்டுதாரர்களுக்கு வினியோகிக்க விவசாயிகளிடம் தரமான முழு நீள கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியை கூட்டுறவு துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு அறிவிக்கும் நாளில் வினியோகம்:
இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பிற்கு வழங்க பச்சரிசி, சர்க்கரை மூடைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி முதலில் துவக்கப்படும். அடுத்ததாக முழு நீள கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைக்கு அனுப்பப்படும். அரசு அறிவிக்கும் நாட்களில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என்றார். ///

