/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முகூர்த்த நாட்கள் குறைந்தது ஆடு, கோழி விலையும் சரிவு
/
முகூர்த்த நாட்கள் குறைந்தது ஆடு, கோழி விலையும் சரிவு
முகூர்த்த நாட்கள் குறைந்தது ஆடு, கோழி விலையும் சரிவு
முகூர்த்த நாட்கள் குறைந்தது ஆடு, கோழி விலையும் சரிவு
ADDED : நவ 06, 2025 07:21 AM
திருப்புவனம்: முகூர்த்த நாட்கள் குறைந்ததையடுத்து வாரச்சந்தையில் ஆடு, கோழி விலை குறைய தொடங்கியுள்ளது.
திருப்புவனத்தில் வாரம்தோறும் நடைபெறும் கால்நடை சந்தையில் ஆயிரம் முதல் இரண்டா யிரம் ஆடு, கோழிகள் விற்பனையாகும். ஆடி, தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இது இரு மடங்காக உயரும். கேரளா, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு, கோழி வாங்க ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.
திருப்புவனத்தைச் சுற்றி யுள்ள பெத்தானேந்தல், மணல்மேடு, கொந்தகை, கீழடி, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளாடு, செம்மறியாடு, கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்கப் படுகின்றன.
விவசாயிகள் தங்களது தேவைக்காக வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை செய்வது வழக்கம், தீபாவளி திருநாளை ஒட்டி வாரச்சந்தையில் பத்து கிலோ எடை கொண்ட ஆடு பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி சந்தையன்று இரண்டாயிரம் ஆடுகள் வரை விற்பனையானது.
தீபாவளி முடி வடைந்ததை தொடர்ந்து கால்நடைகள் வரத்தும் குறைந்ததுடன் விலையும் குறைந்து விட்டது. பத்து கிலோ எடை கொண்ட ஆடு ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரையே விற்பனையானது. கடந்த வாரச் சந்தையில் 300 ஆடுகள் வரையே விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், விசேஷ நாட்கள் வரும் மாதங்களில் கிடையாது, இனி ஜனவரி பிறந்தால் தான் விசேஷ நாட்கள் வரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் அடைந்துள்ளனர். எனவே கால்நடைகளை விற்பனை செய்ய மாட்டார்கள், வரத்தும் குறைந்துவிட்டது, விலையும் குறைந்து விட்டது, என்றனர்.

