/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழச்சிவல்பட்டிக்கு வராத அரசு பஸ்கள்
/
கீழச்சிவல்பட்டிக்கு வராத அரசு பஸ்கள்
ADDED : ஜன 30, 2025 05:32 AM

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டிக்கு குறைந்து விட்ட பஸ் வசதியை மீண்டும் அதிகரிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
கீழச்சிவல்பட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கியமான வர்த்தக சந்திப்பாகும். இங்கு நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்வர்.
கீழச்சிவல்பட்டி வழியாக மதுரை -தஞ்சாவூர், திருச்சி- மானாமதுரை, திருப்புத்தூர்- திருச்சி,புதுக்கோட்டை- மதுரை செல்லும் அரசு, தனியார் பஸ்கள் காலை முதல் இரவு 10:30 மணி வரை வந்து சென்றன. தற்போது புறவழிச்சாலை வழியாக பெரும்பாலான பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால் இங்குள்ளவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அழகப்பன், விராமதி கூறுகையில், முன்பு காலை முதல் இரவு வரை அரசு,தனியார் பஸ்கள் தொடர்ந்து வந்தன. இப்போது பூக்கட்டுக்களை இறக்க மட்டுமே தனியார் பஸ் வருகிறது. இதனால் 3 கி.மீ.துாரத்திலுள்ள பள்ளிவாசல் மற்றும் டோல்கேட் சென்று பஸ் ஏறுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நகருக்குள் பஸ்கள் வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உத்தரவிட்டாலும் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை' என்றார்.

