ADDED : டிச 28, 2024 08:05 AM
சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்புவனத்தில் கிளை தலைவர் கருப்புராஜா, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிளை தலைவர் முத்தையா, நகராட்சி முன் ஜெயப்பிரகாஷ், கோட்டாட்சியர் அலுவலகம் முன் நிர்வாகி கலைச்செல்வி, தாசில்தார் அலுவலகம் முன் நிர்வாகி கலைச்செல்வம், ஹிந்து அறநிலைய துறை அலுவலகம் முன் நிர்வாகி நவநீத கிருஷ்ணன், கூட்டுறவு துறை அலுவலகம் முன் நிர்வாகி கிங்ஸ்டன் டேவிட், முன்னாள் படை வீரர் நல அலுவலகம் முன் முருகன், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நிர்வாகி கோபால், சிங்கம்புணரியில் நிர்வாகி குமரேசன், தாசில்தார் அலுவலகம் முன் நிர்வாகி மதிவாணன், இளையான்குடியில் பழனி, தேவகோட்டையில் ரீகன், சாக்கோட்டையில் ஜாகீர் உசேன், திருப்புத்துாரில் தவ்பீக் அகமது, காளையார்கோவிலில் நிர்வாகி பாலசங்கர், சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மாரி, மகளிர் அணி அமைப்பாளர் லதா, மாவட்ட இணை செயலாளர் பயாஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.