/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழா
/
அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 19, 2025 07:50 AM

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்ட மளிப்பு விழா நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் விழாவில் பங்கேற்கவில்லை.
பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி. நாராயணன் பேசினார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி வரவேற்று பல்கலை சாதனை குறித்து பேசினார்.
ஒருவருக்கு அறிவியல் அறிஞர் பட்டம், 133 பேருக்கு முனைவர் பட்டம் உட்பட பல்வேறு துறைகளில் பயின்ற 43 ஆயிரத்து 142 பேரில், 314 மாணவ மாணவி யருக்கு நேரடியாக பட் டங்கள் வழங்கப்பட்டது.
இதில், பதிவாளர் செந்தில்ராஜன், தேர் வாணையர் ஜோதி பாசு, பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா சிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அழகப்பா பல்கலை வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, கலந்து கொண்டார். அதில் மாணவிகளை சந்தித்து மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்க்க வேண்டும். அடுத்த முறை வரும்போது, மரங்கள் நன்றாக வளர்ந்து இருக்கவேண்டும் என்று கூறினார்.
பள்ளியில் கலந்துரையாடல் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, கலந்து கொண்டார். மாணவர்களிடம் கலந்துரையாடியதோடு மாணவர்களின் கேள்விக்கும் பதிலளித்தார்.
அதில், மாணவர்கள் ஏழ்மையாக இருக்கலாம். மாணவர்களின் மனதில் ஏழ்மை இருக்கக் கூடாது. நானும் கிராம பகுதியைச் சேர்ந்தவன் தான். 8. கி.மீ. துாரம் நடந்து சென்று படித்தேன். மின் வசதி கூட இல்லை.
மாணவர்கள் பெரிதாக கனவு காண வேண்டும். அந்தக் கனவு வெற்றியடைய முழுமையாக உழைக்க வேண்டும். நேர மேலாண்மை மிகவும் அவசியம். மாணவர் களுக்கு தன்னம்பிக்கை மிக அவசியம். எனக்கு ரோல் மாடல் எனது அம்மா தான்.
உலகம் முழுவதும் சுற்றினாலும், தமிழ் நாட்டிற்கு வருகிற ஒவ்வொரு முறையும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். தமிழ் மொழி மிகவும் சக்தி வாய்ந்தது. தமிழர்கள் உழைப்பாளிகள். ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும்போது பலவற்றைக் கற்றுக் கொள்வதால் நான் மாணவனாகவே இருக்கிறேன்.