நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பள்ளி செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாணவி யாகஸ்ரீ வரவேற்றார். விழாவில் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் அசோக்குமார் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
விழாவில் முதல்வர் கௌரி சாலமன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவி ருத்வி நன்றி கூறினார்.