ADDED : ஏப் 06, 2025 07:31 AM

அ நிறம் | அளவு
காரைக்குடி : புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது.
துணைவேந்தர் க. ரவி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பட்டங்களை வழங்கினர். தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா முன்னிலை வகித்தனர்.
452 பேர் பட்டம் பெற்றனர்.
விழாவில் கோஞ்சங்குடியை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து 23 பட்டம் பெற்றார். இரண்டரை அடி உயரமே உள்ள மாரிமுத்து பி.ஏ., தமிழில், கல்லுாரி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். உழைப்புக்கும், கல்விக்கும் உயரம் ஒரு தடை அல்ல என்று நிரூபித்துள்ள இவர் தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்.
