ADDED : பிப் 22, 2026 07:30 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் நளதம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். வேதியியல் துறை தலைவர் பூங்கொடி வரவேற்றார். அழகப்பா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜோதி பாசு 746 மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை வழங்கினார்.
பல்கலை தரவரிசையில் இடம் பிடித்த 17 மாணவிகளுக்கு மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி பரிசு வழங்கினார். மாணவியர் பேரவைத் தலைவி அபிவர்ஷினி நன்றி கூறினார்.
