ADDED : ஏப் 18, 2026 03:58 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை குட்வில் இன்டர்நேஷனல் மற்றும் பப்ளிக் சி.பி.எஸ்.,சி., பள்ளியில் நடைபெற்ற மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவிற்கு தாளாளர் பூமிநாதன் தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார்.
போட்டி, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதல்வர் லெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
