UPDATED : ஆக 08, 2026 05:07 PM
ADDED : ஆக 08, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி அமராவதி புதுாரில் உள்ள ஸ்ரீராஜராஜன் இன்ஜி., கல்லுாரியின் 11 வது பட்டமளிப்பு விழா மற்றும் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லுாரிகளின் 16 வது பட்டமளிப்பு விழா நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமை ஏற்றார்.
கனிம வளத்துறை அமைச்சர் பிரபு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இன்ஜி., கல்லூரி முதல்வர் முத்துக்குமார் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் சிவக்குமார், அங்கையர்கன்னி, டீன் சிவகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் 290 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
