ADDED : ஏப் 02, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே புலவன்வயல் பகுதியில் எஸ்.ஐ., குகன் தலைமையிலான போலீசார் சென்றனர். அங்கு இயந்திரம் மூலம் நம்பர் பிளேட் இல்லாத இரண்டு டிராக்டரில் கிராவல் மண் அள்ளியவர்களை பிடித்து விசாரித்தனர்.
காளையார்கோவில் அருகே பொத்தகுடி கருப்பையா மகன் குமார் 48 இயந்திர டிரைவர், பொட்டகவயல் பழனி மகன் அங்குசாமி 50 டிராக்டர் டிரைவர், பொட்டகவயல் பஞ்சவர்ணம் மகன் சேகர் 34 டிராக்டர் டிரைவர் ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து டிராக்டர் மற்றும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

