ADDED : மே 30, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3ம் தேதி முதல் துவங்குகிறது.
சிவகங்கை வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3 ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி தொடர்பாக 94449 25890ல் அறிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
