ADDED : ஜன 29, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் கொய்யாப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
பொதுவாக இயற்கை உணவு மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதிலும் பழங்களை அப்படியே சாப்பிட பலரும் விரும்புகின்றனர். கொய்யாப்பழம் திருப்புவனம் அருகே கட்டையம்பட்டி, சுண்ணாம்பூர், திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
கோடை காலத்தில் அதிகளவு விளையும் கொய்யாப்பழம் கடந்த இரு மாதங்களுக்கு முன் கிலோ 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
நேற்று திருப்புவனத்தில் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் என விலை அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள் கூறுகையில்:
வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. சிவப்பு கொய்யா கிலோ 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.