/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மகளிர் கபடி குஜராத் அணி முதலிடம்
/
திருப்புத்துாரில் மகளிர் கபடி குஜராத் அணி முதலிடம்
திருப்புத்துாரில் மகளிர் கபடி குஜராத் அணி முதலிடம்
திருப்புத்துாரில் மகளிர் கபடி குஜராத் அணி முதலிடம்
ADDED : ஜூலை 22, 2025 03:50 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தி.மு.க., சார்பில் நடந்த அகில இந்திய மகளிர் கபடி போட்டியில் சாய் குஜராத் அணி பாலம் டில்லி அணியை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர். போட்டியில் பல மாநிலங்களைச் சேர்ந்த 27 அணியினர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் விளையாடினர். ஆட்டம் முடிவில் 36:24 என்ற புள்ளியில் டில்லி அணியை குஜராத் தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது. இரண்டாமிடத்தை டில்லி அணியினர் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு கோப்பை, ரொக்கப்பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்டத்துணைத் தலைவர் காளிமுத்து போட்டியை ஒருங்கிணைத்தார்.