
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. அப்பர், சுந்தர மூர்த்தி திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில், இங்கு நால்வருக்கும் என தனித்தனி சன்னதி உண்டு, ஆண்டுதோறும் ஆடி மாதம் இங்கு ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டம் சார்பில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு குருபூஜை விழா நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது.
தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனை காட்டப்பட்ட உடன் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உற்ஸவப்புறப்பாடு நடந்தது.

