சிவகங்கை: சிவகங்கை காந்திவீதியில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் விற்ற கடைக்கு சீல் வைத்து, உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையில், மதுவிலக்கு போலீசார் ரவி உள்ளிட்டோர் காந்திவீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் ஆய்வு செய்தனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப், பான் மசாலா உட்பட 3 கிலோ எடையுள்ள போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி: காரைக்குடி போலீசாருக்கு காரில் சிலர் குட்கா மூடைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் எஸ்.பி., பட்டினத்தை சேர்ந்த தவுலத் நிசார் 39, திருவாடானை கருப்பூர் கணேஷ் 23, எஸ்.ஆர். மணக்குடி திருமூர்த்தி 34, முகமது அலி ஜின்னா 58 நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 202 கிலோ குட்கா பொருட்களை ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.