UPDATED : மே 01, 2026 09:10 PM
ADDED : மே 01, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் காற்றில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. காளாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது. காற்றின் காரணமாக மனப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
