/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவேரி திட்ட குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர்; பெருகும் கண்மாயில் குளிக்கும் மக்கள் மகிழ்ச்சி
/
காவேரி திட்ட குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர்; பெருகும் கண்மாயில் குளிக்கும் மக்கள் மகிழ்ச்சி
காவேரி திட்ட குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர்; பெருகும் கண்மாயில் குளிக்கும் மக்கள் மகிழ்ச்சி
காவேரி திட்ட குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர்; பெருகும் கண்மாயில் குளிக்கும் மக்கள் மகிழ்ச்சி
UPDATED : அக் 05, 2025 05:42 AM
ADDED : அக் 04, 2025 10:26 PM

சிவகங்கை கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் செல்லும் பிரதான குழாய்கள் திருப்புத்துார் ஒன்றியம் வழியாக செல்கிறது. வழியிலுள்ள கிராமங்களில் மேல்நிலைத் தொட்டி அமைத்து கிராமங்களுக்கும் காவிரிக் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
அதில் சிறுகூடல்பட்டி,ஊர்குளத்தான்பட்டி வழியாக செல்லும் பிரதானக் குழாயில் ஊர்குளத்தான்பட்டி கண்மாய் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேட் வால்வு உள்ள பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வெளியேறுகிறது.
கேட்வால்வை மூட முயற்சி செய்தும் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கண்மாயில் நீர் நிரம்பி பெருகி வருகிறது.
இக்கண்மாயில் சாலைப்பணிக்காக மண் அள்ளப்பட்டுள்ளதால் ஆழமான பள்ளங்களில் தற்போது நீர் நிரம்பி வருகிறது.
இப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீரில் தற்போது உற்சாகமாக குளித்து வருகின்றனர். அப்பகுதியில் பல கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் விவசாயப்பணிகளே துவக்கப்படவில்லை.
இந்நிலையில், இக்கண்மாயில் இரு போக விவசாயத்திற்கு தேவையான அளவில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் துவக்கப்படவில்லை. தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. குழாய்களில் உள்ள கழிவு வெளியேற்றவும், நீர் வெளியேறும் வேகம் குறித்தும் சோதனை ஒட்டம் மூலம் அறியப்படும்.
சோதனை ஓட்டம் முடிந்த பின்னரே தேவையான இடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.
திருப்புத்துார், அக்.5--
திருப்புத்துார் அருகே காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டக்கேட் வால்வு குழாயிலிருந்து வெளியேறும் நீரால் கண்மாய் பெருகத் துவங்கியுள்ளது. அப்பகுதியினர் காவிரி நீரில் குளிக்கத் துவங்கியுள்ளனர்.