ADDED : பிப் 17, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: சிங்கம்புணரி ஒன்றியம் மருதிபட்டியை சேர்ந்தவர்கூலித்தொழிலாளி சந்திரன். இவரது மனைவி வெளியூர் சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த சந்திரன், அவரது குடியிருப்பு பகுதியில் விளையாடிய 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து வீட்டிற்குள் வரவழைத்துள்ளார். வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி தாயாரிடம் கூற, தாயார் எஸ்.வி.மங்கலம் போலீசில் புகார் செய்துஉள்ளார். திருப்பத்தூர்அனைத்து மகளிர் போலீசார் சந்திரனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் மேலும் 3 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.