/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அணிவகுக்கும்அறுவடை வாகனங்கள்
/
திருப்புவனத்தில் அணிவகுக்கும்அறுவடை வாகனங்கள்
ADDED : ஜன 20, 2024 04:49 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நெல் அறுவடைஅதிகரிக்க தொடங்கிய நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கதிர் அடிக்கும் வாகனங்கள் அதிகஅளவு வர தொடங்கியுள்ளன.
திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், கலியாந்துார், ராங்கியம், நாங்கூர், கருவக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளன, மழையை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகளின் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
இப்பகுதியில் பெரும்பாலும் கோ50, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., கர்நாடகா பொன்னி உள்ளிட்ட 90 முதல் 120 நாள் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். பொங்கலுக்கு முன்னதாகவே அறுவடை முடிவடைய வாய்ப்புள்ள நிலையில் மழை காரணமாக வயல்கள் ஈரமாக இருந்ததால் தாமதமாக பணிகள் தொடங்கியுள்ளன.
தேனி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அறுவடை இயந்திரங்கள் திருப்புவனம் பகுதிக்கு வந்துள்ளன.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், டயர் வண்டிகளுக்கு வாடகை பெருமளவு குறைவு, மணிக்கு இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
மேலும் ஒரு மணி நேரத்தில் ஓரு ஏக்கர் அறுவடை முடிந்து விடும், வைக்கோலுக்கும் ஓரளவிற்கு டயர் வண்டி மூலம் வருவாய் கிடைக்கும் என்பதால் 10க்கும் மேற்பட்ட கதிர் அறுக்கும் இயந்திரங்கள் திருப்புவனம் பகுதிக்கு வந்துள்ளன. திருப்புவனம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதிகளுக்கும் இந்த வாகனங்கள் செல்ல உள்ளன, என்றனர்.