தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்.,இயந்திரம், ஜெனரேட்டர் இல்லை   வாடிக்கையாளர்கள் தவிப்பு   

தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்.,இயந்திரம், ஜெனரேட்டர் இல்லை   வாடிக்கையாளர்கள் தவிப்பு   

தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்.,இயந்திரம், ஜெனரேட்டர் இல்லை   வாடிக்கையாளர்கள் தவிப்பு   


UPDATED : செப் 08, 2026 08:21 PM

ADDED : செப் 08, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 08:21 PM ADDED : செப் 08, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்., மிஷின் இன்றி சேமிப்பு கணக்கு துவக்கிய 10 ஆயிரம் பேர் அதிருப்தியில் உள்ளனர். சிவகங்கை தொண்டி ரோட்டில் தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. இதே அலுவலகத்தில் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகமும் செயல்படுகிறது.

இங்கு 10 ஆயிரம் பேர் வரை சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏ.டி.எம்., கார்டு பெற்றுள்ளனர். இவர்கள் கமிஷன் தொகை பிடித்தம் இன்றி பணத்தை எடுக்க தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்.,மிஷின் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.இதுவரை ஏ.டி.எம்.,மிஷின் பொருத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

தலைமை தபால் நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதியின்றி, மின்வெட்டு காலங்களில் பெரிதும் சிரமமாக உள்ளதாக ஊழியர்கள் புலம்புகின்றனர்.

தலைமை தபால் நிலையத்தில் 15 அக்கவுண்டன்ட் பணியில் உள்ள இடத்தில் 4 பேர் தான் இருப்பதால், பல மாதங்களாக 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே போன்று உதவி தபால் அலுவலர்கள் 2 பணியிடம் காலியாக உள்ளது. இதனால் தலைமை தபால் அலுவலகத்திற்கான டெபாசிட் சேகரிப்பு, சேமிப்பு கணக்கு துவக்க செய்தல் போன்ற வளர்ச்சி பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

* சொந்த கட்டடமின்றி பாதிப்பு: தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சிவகங்கையில் தலைமை தபால் நிலையத்திற்கு இது வரை சொந்த கட்டடமே இல்லை. சொந்த கட்டடம் இருந்தால் தான், ஏ.டி.எம்., மிஷின் பொருத்தி தருவார்கள். அதே போன்று ஜெனரேட்டர் வசதி செய்து தரப்படும். தொடர்ந்து வாடகை கட்டடத்திலேயே இயங்குவதால் வளர்ச்சி பணிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us