/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 29, 2025 06:18 AM
சிவகங்கை: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக ஆர்ச் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாரிமுத்து தலைமை வகித்தார். முருகேசன் முன்னிலை வகித்தார். முஹம்மது ைஹாப் வரவேற்றார்.
சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி பேசினார். தமிழ்நாடு வாருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்டத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மகேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சுரேஷ், அரசு பணியாளர் சங்கம் சதீஷ்குமார், பூமிராஜன் பேசினர்.
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 2715 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் அனுமதிக்க கோரி இயக்குனரால் அனுப்பப்பட்ட கோப்புக்கு உடனடி ஒப்புதல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.