/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் கனமழை இரண்டு வீடுகள் இடிந்தன
/
மானாமதுரையில் கனமழை இரண்டு வீடுகள் இடிந்தன
ADDED : டிச 15, 2024 07:23 AM

மானாமதுரை : மானாமதுரையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது. ரோடுகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காட்டு உடைகுளம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
நேற்று மானாமதுரை பூக்காரத் தெருவில் தச்சு தொழிலாளியாக வேலை பார்க்கும் அய்யனார் வீடு பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாமல் பொருட்கள் மட்டும் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் உள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது.
கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் நகர் செல்லும் ரோட்டிலும் வீடுகளை ஒட்டி மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், வீடுகளிலிருந்து வெளியேற முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
கீழப்பசலை ஊராட்சிக்குட்பட்ட ஆதனுார் பகுதியில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து கொண்டதாலும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.