ADDED : ஏப் 22, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: உலக பாரம்பரிய நாளை முன்னிட்டு சிவகங்கை அரசு அருங்காட்சியகம், தொல்நடைக்குழு, மன்னர்மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து கருத்தரங்கம், ஓவியப்போட்டி பரிசளிப்பு விழாவை நடத்தியது.
அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். தொல்நடைக்குழு நிறுவநர் காளிராசா, செயற்குழு உறுப்பினர் வித்யாகணபதி முன்னிலை வகித்தனர். அழகப்பா அரசு கலைக்கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் வேலாயுதராஜா, முனீஸ்வரன் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நல்லாசிரியர் கண்ணப்பன், சிவகங்கை தமிழ்ச்சங்கம் தலைவர் முருகானந்தம், ஓவியர்முத்துகிருஷ்ணன், தலைமையாசிரியர் கோடீஸ்வரன், சாரணிய பயிற்சி ஆணையர் முத்துக்காமாட்சி பேசினர்.