/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊருணியில் பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் தடை
/
ஊருணியில் பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் தடை
ADDED : ஆக 07, 2025 07:14 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணாச்சலம், சுவாமிநாதன், சோமசுந்தரம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் பழமையானது. நெரிசலால் அதை அகற்றி விட்டு, தினசரி மார்க்கெட்டினை இணைத்து அதே பகுதியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும். தற்காலிகமாக நகர சிவன் கோயில் ஊருணி பகுதியில் ஆக.8 முதல் பஸ் ஸ்டாண்ட் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஊருணி மாசுபடும். மக்களுக்கு இடையூறு ஏற்படும். அங்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. சிவன் கோயில் ஊருணி பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மாற்று இடம் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். கோயில் ஊருணி பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.