ADDED : ஜன 10, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெரு, புதுார் ஆகிய இடங்களில் தலா எட்டு லட்ச ரூபாய் செலவில் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட உயர் மின்கோபுர விளக்குகளை கார்த்தி எம்.பி., திறந்து வைத்தார்.
விழா தொடங்குவதற்கு முன் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட காங்., தலைவர் சஞ்சய் காந்தி, நகர் தலைவர் நடராஜன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
