ADDED : பிப் 03, 2024 04:38 AM
காரைக்குடி : காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் புறா எச்சங்களால் கோயில் கோபுரங்கள் மற்றும் சிலைகள் வீணாவதை தடுத்திட வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் 200க்கும் மேற்பட்ட புறாக்கள் திரிகின்றன. இந்த புறாக்களின் எச்சங்கள் கோயில் சிலைகள் மற்றும் கோபுரங்களில் விழுந்து பாழாவதாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீது விழுவதாகவும் புகார் எழுந்தது. எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று ஹிந்து முன்னணியினர் நேற்று புறா எச்சங்களை தூய்மை செய்ய முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்தனர்.
செயல் அலுவலர் பாலாஜி, புறா எச்சங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தூய்மை செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் கார்த்தி, செயலாளர் சாத்தையா, மாவட்டச் செயலாளர்கள் தங்கப்பாண்டி, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

