/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஜனை பாடி, உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ஹிந்து அமைப்பினர் கைது
/
பஜனை பாடி, உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ஹிந்து அமைப்பினர் கைது
பஜனை பாடி, உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ஹிந்து அமைப்பினர் கைது
பஜனை பாடி, உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ஹிந்து அமைப்பினர் கைது
ADDED : பிப் 04, 2025 10:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல அனுமதிக்காத போலீசாரை கண்டித்து காரைக்குடியில் ஹிந்து முன்னணி அமைப்பினர் பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில் உள்ள ஹிந்து முன்னணி அலுவலகத்தில் இருந்து, ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு தயாராகினர். இதையடுத்து, போலீசார் அலுவலகத்திலேயே அவர்களை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
இதனை கண்டித்து காரைக்குடியில் ஹிந்து முன்னணி அமைப்பினர் பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.