/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புனித குழந்தை தெரசாள் சர்ச்சில் அலங்கார தேர்பவனி
/
புனித குழந்தை தெரசாள் சர்ச்சில் அலங்கார தேர்பவனி
ADDED : அக் 01, 2024 05:04 AM

மானாமதுரை: மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச் 60ம் ஆண்டு நற்கருணை பெருவிழாவில் நேற்று மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22ம் தேதி மாலை திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது மாலை சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடு, திருப்பலி நடைபெற்றன.முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனிக்காக நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 8:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித குழந்தை தெரசாள் சொரூபம் கொண்டு செல்லப்பட்டு ஊர்வலமாக வந்தது.இன்று நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார் சார்லஸ் கென்னடி மற்றும் மானாமதுரை பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.