ADDED : ஜன 10, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு நடந்தது.
சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில், கூடுதல் எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி., (பொறுப்பு) பாண்டீஸ்வரி, இன்ஸ்பெக்டர் செந்தில்சுரேஷ் தேர்வினை நடத்தினர். சிவகங்கை மாவட்ட அளவில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 (83 ஆண், 33 பெண்) பணியிடத்தை நிரப்பும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் வயது 18 முதல் 55க்கு உட்பட்டவர்கள் பங்கேற்றனர். போட்டி தேர்வுக்கு 92 ஆண்கள், 40 பெண்கள் என 132 பேர் பங்கேற்றனர்.
