sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை

/

 வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை

 வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை

 வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை


ADDED : நவ 20, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே காளையார்மங்கலத்தில் வீட்டின் உரிமையாளரை கட்டி போட்டு 5 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காளையார்மங்கலம் புதுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் 40. இவர் தாய் மீனாட்சியுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு டீக்கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 6 பேர் திடீரென முருகப்பனை தாக்கி வாயில் துணியை வைத்து கை கால்களை கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், அவரது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முருகப்பன் மதகுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.

4 மாதங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள 3 வீடுகளில் பித்தளை மற்றும் வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுவரை நடந்த 4 கொள்ளைகளிலும் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடிக்க வில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us