/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆத்திவயல் கிராமத்தில் குதிரையெடுப்பு விழா
/
ஆத்திவயல் கிராமத்தில் குதிரையெடுப்பு விழா
ADDED : ஆக 09, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி:ஆத்திவயல் கிராமத்தில் ஆத்திருடைய அய்யனார் கோயிலில் 32 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற குதிரை எடுப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டி விரத மிருந்தனர்.
நேற்று குதிரையெடுப்பு விழாவை முன்னிட்டு நேர்த்திக் கடனாக மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், சுவாமி உருவங்களை கிராம மக்கள் தலைச்சுமையாக சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்தனர்.பின்னர் குதிரைகளுக்கும், சுவாமிகளுக்கும் அபிஷேக,ஆராதனை,பூஜை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கோயில் முன் எருது கட்டும் இரவு, கலை நிகழ்ச்சி நடைபெற்றது.