/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிப்ரவரி வரை வாழைக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
/
பிப்ரவரி வரை வாழைக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
பிப்ரவரி வரை வாழைக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
பிப்ரவரி வரை வாழைக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
ADDED : டிச 03, 2024 05:38 AM
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் வாழைக்கு வரும் பிப்ரவரி வரை காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவித்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், கலியாந்துார், மாரநாடு, எம்.பறையங்குளம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. முகூர்த்த நாட்களை கணக்கிட்டு பயிரிடப்படும் வாழைக்கு சீசன் காலங்களை தவிர மற்ற நாட்களில் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுதவிர காற்று வீசும் காலங்களில் மரங்கள் சாய்ந்தும், வறட்சி காலங்களில் விளைச்சல் பாதித்தும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் சமீப காலமாக அதிகளவு விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஸ்தாளி, பச்சை, நாடு, ஒட்டு, கற்பூரம் என பலவகை வாழைகள் இருந்தாலும் திருப்புவனம் வட்டாரத்தில் நாடு, ஒட்டு ரகமே அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு வரை 311 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை இந்தாண்டு 348 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. வாழைக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என்றும் எக்டேருக்கு ஆறாயிரத்து 249 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் அறிவித்துள்ளனர்.