தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மருத்துவமனை முன் பள்ளம்

மருத்துவமனை முன் பள்ளம்

மருத்துவமனை முன் பள்ளம்


ADDED : மார் 29, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவமனை முன் பள்ளம்: தேவை ரோடு



சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு மருத்துவமனை டயாலிசிஸ் மைய கட்டடம் முன்பாக முறையான பாதை இல்லாததால் நோயாளிகளும், ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.

இம்மருத்துவமனையில் கடந்தாண்டு ப.சிதம் பரத்தின் எம்.பி., நிதியில் இருந்து டயாலிசிஸ் மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அக் கட்டடத்திற்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒரு பக்கம் படிகளும், இன்னொரு புறம் சாய் தளமும் அமைக்கப் பட்டுள்ளது.

இங்கு நோயாளிகள் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் போதும், அவர் களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வரும்போதும் முறையான பாதை இல்லாததால் சக்கரங்கள் சகதியில் புதைந்து சிரமம் ஏற்படுகிறது. கட்டடம் அருகே ஆம்புலன்ஸ்களும் வந்து செல்ல முடிவதில்லை. இதனால் நோயாளிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே டயாலிசிஸ் கட்டடம் முன்பாக பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us