தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவமனைக்கு கூடுதல் கார்டியாலஜிஸ்ட் தேவை

 மருத்துவமனைக்கு கூடுதல் கார்டியாலஜிஸ்ட் தேவை

 மருத்துவமனைக்கு கூடுதல் கார்டியாலஜிஸ்ட் தேவை


ADDED : ஜன 31, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் கூடுதல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்களை பணியமர்த்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், தீவிர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் செயல்படுகிறது.

உள்நோயாளிகள் பிரிவில் 800 பேர், தினமும் வெளிநோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினசரி 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், 60 முதல் 70 புற நோயாளிகள் எக்கோ பரிசோதனை செய்கின்றனர். மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை செய்வதற்கு இதய நோய் பிரிவில் ஒரே ஒரு டாக்டர் தான் பணியில் உள்ளார். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு குறைந்தது 3 கார்டியாலஜிஸ்ட் டாக்டராவது பணியில் இருக்க வேண்டும். ஆனால் சிவகங்கை மருத்துவமனையில் ஒருவர் தான் உள்ளார். இவர்தான் புறநோயாளிகள் பிரிவு, வார்டில் உள்ள இதய நோயாளிகளுக்கு சிகிச்சை, அரசு நடத்தக்கூடிய முகாமிற்கும் சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.

இவரது வார விடுமுறை,அவசர விடுமுறை , முகாம் செல்லும் நாட்களில் மருத்துவமனையில் அவசரத்திற்கு வரும் இதய நோயாளிகள் எக்கோ பரிசோதனை செய்ய டாக்டர் இல்லாமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப படுகிறார்கள். மருத்துவக் கல்லுாரி ஆரம்பித்து 13 ஆண்டுகள் கடந்த நிலையில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்லும் மருத்துவக் கல்லுாரியில் இதயநோயாளிகள் பிரிவில் கூடுதல் டாக்டர்களை பணி அமர்ந்த மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us