/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனையில் தரச்சான்று குழு ஆய்வு
/
மருத்துவமனையில் தரச்சான்று குழு ஆய்வு
ADDED : ஜூலை 16, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்  லக்சயா தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பிரசவ அறை மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்குகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
மதுரை இணை இயக்குநர் குடும்ப நலம் நடராஜன், ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ஷகிலா ஆய்வை நடத்தினர்.கல்லுாரி முதல்வர் சத்யபாமா, நிலைய மருத்துவர் முகமது ரபி, துறை தலைவர் நாகசுதா, இணை பேராசிரியர் தென்னரசி உள்ளிட்ட டாக்டர்கள் உடன் இருந்தனர்.

