/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூரில் விடுதிகளாக மாறும் வீடுகள்:அனுமதியின்றி பெருகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் l
/
கோட்டையூரில் விடுதிகளாக மாறும் வீடுகள்:அனுமதியின்றி பெருகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் l
கோட்டையூரில் விடுதிகளாக மாறும் வீடுகள்:அனுமதியின்றி பெருகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் l
கோட்டையூரில் விடுதிகளாக மாறும் வீடுகள்:அனுமதியின்றி பெருகுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் l
ADDED : ஜன 09, 2025 05:18 AM
கோட்டையூர் பேரூராட்சியில் விரிவாக்கப்பகுதிகள் அதிகம் உள்ளது. அழகப்பா பல்கலை., கல்லுாரி சாலையை ஒட்டி இப்பகுதி அமைத்துள்ளது. அமைதி பூங்காவாக இருந்த இப்பகுதியில் ஏராளமானோர் வீடுகளை கட்டி குடியேற தொடங்கினர்.
இங்கு அரசு தேர்வுகளுக்கு தயாராகும் கோச்சிங் சென்டர் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்க பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர். வெளியூரில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு போதிய அளவு தங்கும் வசதி இல்லை.இதனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் விடுதிகளாக மாறியுள்ளது.
குறிப்பாக மாணவர்களுக்கு மட்டுமே, வாடகைக்கு விடப்படுவதால், புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. புரோக்கர்கள் சிலரே வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகளாக மாற்றி வருகின்றனர். நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்கின்றனர். ஒரே வீட்டில் 30 முதல் 50 பேர் வரை தங்குகின்றனர். வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் இந்த விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு போதிய பாதுகாப்போ, முறையான கட்டுப்பாடோ இல்லை.
இரவு நேரங்களில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதால் பல்வேறு குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் யார், வெளியில் இருந்து வரும் மாணவர்கள் யார் என்று தெரியாத நிலை உருவாகி உள்ளது.
தங்கியுள்ள இளைஞர்களுக்குள் மோதல் ஏற்படுவதோடு அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. அங்கு குடியிருப்பவர்கள் இரவில் வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளனர். மேலும் அதிக இளைஞர்கள் நடமாடும் பகுதியை குறிவைத்து, போதைப் பொருள் விற்பனையும் தாராளமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரிய குற்றங்கள் நடந்த பிறகு கட்டுப்பாடுகளை கொண்டு வராமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே உரிய அனுமதி மற்றும் கட்டுப்பாடற்ற விடுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.