ADDED : டிச 11, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,டிச.11--
சிவகங்கை மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒக்கூர் சோமசுந்தரம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் அப்பாஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜார்ஜ் வரவேற்றார். புள்ளியல் ஆய்வாளர் கண்ணதாசன், எஸ்.ஐ., சேகர், சிறப்பு எஸ்.ஐ.,ஜோதிமணி மாணவர்களுக்கு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

