
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு வீரத்தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிவகங்கை நகரில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
வீரத்தமிழர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர்அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் தலைமை வகித்தார். காங்., சார்பில் எம்.பி., கார்த்தி, முன்னாள் எம்.எல்.,ஏ., ராஜசேகரன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், கோபி, ஸ்ரீதர், பா.ஜ., நகர் தலைவர் உதயா, நகர் பொது செயலாளர் பாலா, தமிழக வாழ்வுரிமை மாவட்ட தலைவர் பாலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.