தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மனைவியை தாக்கியவரை கொன்ற கணவர் கைது

மனைவியை தாக்கியவரை கொன்ற கணவர் கைது

மனைவியை தாக்கியவரை கொன்ற கணவர் கைது


UPDATED : மே 01, 2025 01:49 AM

ADDED : மே 01, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2025 01:49 AM ADDED : மே 01, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடி அருகே மனைவியை தாக்கியவரை கணவர் அடித்துக் கொன்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லுவயலைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராஜா 33. இவரது பெரியப்பா மகன் பாண்டி 30, பக்கத்து வீட்டில் வசிக்கிறார். சகோதரர் உறவு முறை கொண்ட இருவருக்கும், இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்தது.

ராஜாவின் மனைவி பாண்டீஸ்வரி தனது வீட்டில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாண்டிக்கும், பாண்டீஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாண்டி, பாண்டீஸ்வரியை அடித்தார். தகவல் அறிந்து வந்த ராஜா, பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார். தடுக்க வந்த பாண்டி தம்பி சுரேைஷயும் கட்டையால் அடித்தார். காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சோமநாதபுரம் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us