/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க.,வில் இருந்து யார் விலகினாலும் கவலை இல்லை
/
அ.தி.மு.க.,வில் இருந்து யார் விலகினாலும் கவலை இல்லை
அ.தி.மு.க.,வில் இருந்து யார் விலகினாலும் கவலை இல்லை
அ.தி.மு.க.,வில் இருந்து யார் விலகினாலும் கவலை இல்லை
ADDED : ஆக 14, 2025 02:31 AM
சிவகங்கை: அ.தி.மு.க.,வில் இருந்து யார் விலகினாலும் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்கள் கொள்கை தான் முக்கியம் என்று சிவகங்கையில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
சிவகங்கையில் தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கூறுகையில், தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கை கெடுக்கிறது. காவல்துறையில் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாத காரணத்தால் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கிறது. வளர்ந்து வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளரை பல பேர் விமர்சிக்கிறார்கள். யார் விமர்சித்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அ.தி.மு.க., என்பது கடல் அலை போன்றது. இதில் யார் போனாலும் வந்தாலும் பிரச்னை இல்லை. இது பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்ட இயக்கம். இதில் யார் போனாலும் வந்தாலும் எங்களுக்கு எங்கள் கொள்கை தான் முக்கியம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பழனிசாமி தான் முக்கியம். கூட்டணி குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என்றார்.