/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்
/
பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்
பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்
பகைவரைவென்றானில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் அச்சம்
ADDED : டிச 15, 2025 06:05 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே பகைவரை வென்றானில் தடுப்பு சுவர் இல்லாத தரைப்பாலத்தால் விபத்து அச்சம் நிலவிவருகிறது.
பகைவரை வென்றான் பகுதிக்கு செல்லும் பகுதியில் உள்ள தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆனதால் அதிலிருந்த தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.
ரேஷன் கடைக்கு மல்லிப்பட்டிணம் மக்களும் செல்கின்றனர். பாலத்தின் தடுப்பு சுவர் சேதமானதால் விபத்து அச்சம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராமத்தினர் கூறியதாவது, இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும், பாலத்தை சீரமைக்கவில்லை.
இதனால் இரவில் வாகனங்களில் செல்வோர் பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர் என்றனர்.